Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
வார ராசிபலன் (21 April To 27 April 2024) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க யாரையும் கண்மூடித்தனமா நம்பக்கூடாது...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 2024 ஏப்ரல் 27 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். வார தொடக்கத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களால் இயன்றதை கொடுக்க முயற்சிக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவீர்கள். கூட்டு வணிகம் செய்பவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். முக்கியமான வணிக முடிவுகளை எடுக்கும்போது எந்த வகையிலும் அவசரப்பட வேண்டாம். வாழ்க்கை துணையுடனான வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடிக்கடி சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். வணிகர்கள் பல சிறிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணிபுரிபவர்களும் வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வார இறுதியில் சிக்கிய பணத்தைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். இருப்பினும், நிதி விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்களில் கூட தடைகளை சந்திக்க நேரிடும். இதனால் லாபத்தைப் பெறுவது கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலைகளில் சிறு பிரச்சனைகளை சந்தித்தாலும், அனைத்தும் வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். அலுவலக சூழல் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். முதலீடு செய்ய நினைத்தால், இந்த வாரத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் சுமாராக இருக்கும். கல்விக்காக அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வணிகர்கள் புதிய சவால்களை சந்திக்கலாம். எந்த முடிவையும் புத்திசாலித்தனமாக சிந்தித்து எடுத்தால், எல்லா சிரமங்களையும் எளிதில் சமாளிக்கலாம். வணிகர்கள் ஒரு பெரிய புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அனுபவசாலிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அரசு வேலை செய்பவர்கள் இந்த வாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய பிரச்சனையால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் சிறிய முடிவுகளை கூட மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். எந்தவொரு சட்டவிரோத வேலையையும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பெரிய சிக்கலில் சிக்க நேரிடும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் கடினமான காலமாக இருக்கும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கோபத்தாலும், அவசரத்தாலும் நஷ்டம் அடைவீர்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வருமானத்தை மட்டும் மனதில் வைத்து செலவு செய்யுங்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், உங்கள் நிதிச் சுமையை பெருமளவு குறைக்கலாம். வீட்டில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சுமாராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமணமாகாதர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையை சந்திக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இந்த வாரத்தில் உங்களின் ஆசைகள் நிறைவேறும். நிதி ரீதியாக, இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். புதிய வருமானத்தைப் பெற முயற்சித்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை இனிமையானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இந்த வாரம் அதிலிருந்து நல்ல பலன் கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த வார இறுதியில் பழைய கடனை அடைத்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், ஒற்றுமையும் நிலவும். ஆனால் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் பண பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரிடும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். காதல் விஷயத்தில் இந்த வாரம் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தால், இந்த வாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் செய்பவர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். இது தவிர, நீதிமன்றம் தொடர்பான எந்த விஷயமும் உங்களை தொந்தரவு செய்தால், அதிலிருந்தும் நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் புதிய வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு இனிமையாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக ஏதேனும் பயணத்தை மேற்கொண்டால், நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வேலை பார்க்கும் கனவில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். வாழ்க்கைத் துணையின் புத்திசாலித்தனத்தால், உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வசதிகள் கூடும். உடல்நலம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ரகசிய எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் நீங்கள் சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். அவசரத்திலும் பீதியிலும் எந்த வேலையையும் செய்ய வேண்டாம். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். நிதி சிக்கல்களில் இருந்து விடுபட, உங்கள் நிதி முடிவுகளை மிகவும் சிந்தனையுடன் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வீட்டில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். இந்த வாரத்தில் ஆரோக்கியம் மோசமாக இருக்க வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications











