Latest Updates
-
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
வார ராசிபலன் (20 August to 26 August 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கணும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் 2023 ஆகஸ்ட் 26 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற விஷயங்களை புறக்கணிக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். வாரத்தின் நடுப்பகுதியில் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பேச்சில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்கள் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். திடீர் பணமும் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு பிஸியாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் திடீர் பணிச்சுமை கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். வணிகர்கள் அவசரமாக எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டால், முடிவை கவனமாக எடுக்க வேண்டும். திருமண வாழ்வில் சில டென்ஷன் வரலாம். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கிய பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் பெரிய வெற்றியை அடைவீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல நினைத்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை ஏற்படும். இந்த வாரத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தவிர்க்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பெரிய பிரச்சனை இருக்காது. இருப்பினும், எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்வில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தந்தையுடனான உங்கள் உறவு இன்னும் வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெரிய கவலை நீங்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரிகள் பெரிய லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். வார இறுதியில் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் பழைய கடனை அடைப்பீர்கள். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். சிறிய விஷயங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை துணை மீது நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆடம்பர செலவு செய்வதைத் தவிர்க்கவும். வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்: புதன்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் காதலை வெளிப்படுத்த விரும்பினால், அவசரப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை பலவீனமாக இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், கடன் வாங்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலைகளை உரிய நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். வணிகர்கள் பெரிய லாபத்தைப் பெற சிறு வேலைகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரத்தில் தசைகள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் வருவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வார இறுதியில் பணப் பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள், ஆனால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அரசு வேலை செய்பவர்கள். சிறிய வேலையையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் கவனக்குறைவால் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், உங்கள் செலவுகளை நீங்கள் சரியாகக் கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தினால், சிறப்பாக இருக்கும். தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீட்டின் ஒற்றுமையைக் காக்க மிகவும் புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டியிருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகும். தேவையில்லாத விஷயங்களில் உங்களுக்குள் சண்டைகள் ஏற்படும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள்பட்ட நோய் தொந்தரவு செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இருப்பினும் எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்யும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் தொடக்கத்தில், வேலை சம்பந்தமாக நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை திடீரென அதிகரிக்கும். இருப்பினும், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். வேலைப்பளு அதிகமாவதால், உடல்நிலை மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: புதன்



Click it and Unblock the Notifications