Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
வார ராசிபலன் (19 November 2023 To 25 November 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பேச்சில் கவனமா இருக்கணும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 நவம்பர் 19 ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 25 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் சவாலானதாக இருக்கும். படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தால் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் நடத்தையை கண்ணியமாக வைத்திருங்கள். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். சிலர் திடீர் பணத்தைப் பெறலாம். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம்.
இருப்பினும் பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் பல சிறிய நன்மைகளைப் பெறலாம். வணிகர்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் ஆற்றல்மிக்கவராக இருப்பீர்கள். அதன் தாக்கம் உங்கள் வேலையில் நன்கு தெரியும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைத்து வெற்றியையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நன்கு சிந்தித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். வீட்டில் சாதகமான சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினரிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள். முக்கியமான நிதி முடிவுகளை எடுப்பதற்கு இந்த வாரம் சாதகமானது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். இருப்பினும் கடினமாக உழைப்பதை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தாமல் உழைக்கும் போது சாதகமான பலன்கள் கிடைக்கும்.
வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் நிறைய லாபம் ஈட்டுவதற்காக அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்கள் பேச்சை கேட்டு நடக்காதீர்கள் மற்றும் உங்கள் சொந்த முடிவுகளை நீங்களே சிந்தித்து எடுங்கள்.பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் காரமான உணவைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டின் சூழ மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். முடிவுகளை எடுப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் உடல் ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் திடீரென்று வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் மிகுந்த சோர்வை சந்திக்கக்கூடும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், தேவைக்கு அதிகமாக பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவழிக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். எதிர்மறை உணர்வையும் உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எண்ணங்களை நெருங்கிய மற்றும் அனுபவம் வாய்ந்த நபருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சிந்திக்காமல் எந்த நடவடிக்கையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சொந்தமாக தொழிலைத் தொடங்கினால் இந்த வாரத்தில் கஷ்டப்ப வேண்டியிருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்கள் கூட தடைகளை சந்திக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் சராசரியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். மற்றும் சிறு விஷயங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணை கோபப்படுவார். ஆரோக்கியம் ஏற்றத்தாழ்வுக்ள் நிறைந்ததாக ரக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கார்களே! இந்த வாரம் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடினமான முடிவுகளைக் கூட மிக எளிதாக எடுப்பீர்கள். இந்த வாரத்தில், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். இந்த வாரத்தில் லட்சுமி தேடிவியின் பரியூர்ண அருன் உண்டு. பணம் தொடர்பான நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால், விரைவில் உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். அலுகூலகத்தில நிதி நிலை வலுப்பெறும். உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் விரும்பிய பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரம் வளரும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பழைய நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களேஸ இந்த வாரம் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீண் செலவு செய்யும் பழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வாரத்தில் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். வாரத்தின் நடுப்பகுதியில் பிஸியாக இருப்பீர்கள். நிறைய ஓட வேண்டியிருக்கும்.
பணிபுரிபவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். எந்தவொரு சட்டவிரோதமான வேலைகளையும் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வார இறுதியில் குடும்பத்துடன் குறுகிய தூர பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். ஆனால் பொறுமையாக அனைத்தையும் சமாளிப்பீர்கள். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற சிறந்த வாரம். கடினமாக உழைப்பவர்களுக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
நிதி நிலை வலுவாக இருக்கும். இருப்பினும், நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கவனக்குறைவாக இருக்க வேண்டாம். பரம்பரை சொத்து சம்பந்தமான சர்ச்சைகள் தீரும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பருவகால நோய்களால் பாதிக்கப்படலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகள் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும். முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தால், நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கு சரியான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும்.
நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணத்தையும் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் காணலாம். மாணவர்கள் படிப்பில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் திறமையை புரிந்து நடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். இருப்பினும் நீங்கள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். ஆனால் உங்கள் இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் பாதையில் உள்ள தடைகள் அனைத்தும் இந்த வாரத்தில் அகற்றப்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும், ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கடன் பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால், இன்னும் நல்லது. கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும், இல்லையெனில் எதிர்காலத்தில் சிரமப்படக்கூடும்.
குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். உங்கள் பேச்சிலும், நடத்தையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால், குடும்ப சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications











