வார ராசிபலன் (19 March to 25 March 2023)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப்போகுது

அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Weekly Horoscope For 19 March 2023 To 25 March 2023 In Tamil

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 மார்ச் 19 முதல் 2023 மார்ச் 25 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இந்த வாரம் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிகம் அவதிப்பட நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் போட்டி அதிகரிக்கும். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் உயர் அதிகாரிகளும் வேலையில் அழுத்தத்தைக் கொடுப்பார்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். ஆனால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, திடீரென ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: புதன்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த வாரத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். கூட்டு தொழில் செய்தால், இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அதற்கு கவலைப்பட வேண்டாம், விரைவில் அனைத்தும் மாறும். நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில் நிதி பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் ஆடம்பரமான பொருள் ஒன்றை வாங்குவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடினமாக உழைத்தால் முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்கள் தங்களின் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணிச்சுமை அதிகரித்துவிடும். திருமண வாழ்க்கை டென்சன் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் செயல் பாராட்டைப் பெறும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்டபடியே அனைத்து வேலைகளும் முடிவடையும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் சிறு முடிவுகளையும் மிகவும் கவனமாக எடுப்பீர்கள். இந்த வாரத்தில் பெரிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் பட்ஜெட்டில் பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவு நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவையும் இந்த வாரத்தில் எடுத்துவிடாதீர்கள். உங்கள் அன்புக்குரியவருடன் மனம் விட்டு பேசினால், உங்கள் மனக்குழப்பங்கள் நீங்கக்கூடும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை தொழிலில் இருப்பவர்கள், நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிரச்சனைகனை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் அவசரமாக எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பண விஷயங்களி கவனக் குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பலவீனமாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இந்த வாரத்தில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறைவான முயற்சியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். மிகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். உங்களின் கடின உழைப்பால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தடைபட்ட வேலைகள் இந்த வாரத்தில் நிறைவேற வாய்ப்புள்ளது. இந்த வாரம் குடும்பத்தினருடன் சிறப்பாக இருக்கும். செலவுகள் சற்று அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோய்கள் உங்களை பாடாய்ப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களின் நிதி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையைப் பொறுத்தவரை, பிஸியான வாரமாக இருக்கும். திடீரென்று உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையை பொறுப்புடன் முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: புதன்

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மனதில் பல கவலைகள் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இது சரியான காலம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று கலவையாக இருக்கும். சட்டவிரோத வேலையை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முக்கியமாக பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் நிதி பக்கத்தை வலுப்படுத்த, நீங்கள் சில கடினமான மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகளும் நல்ல பலனைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, March 19, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion