Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம்
வார ராசிபலன் (17 September 2023 To 23 September 2023) - இந்த வாரம் இந்த ராசிகளின் கையில் பணம் அதிகம் சேரபோகுது
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர் 23 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் உங்களைத் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும், ஆனால் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் உதவியுடன், அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். ஆனால் காலநிலை மாற்றத்தால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: புதன்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று மோசமான சூழ்நிலைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் உங்கள் அணுகுமுறை உயர் அதிகாரிகளின் அதிருப்தியை ஏற்படுத்தும். வியாபாரிகள் முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் சற்று புத்திசாலித்தனமாக யோசித்து நடக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் கோபம் உங்கள் துணையை உங்களிடம் இருந்து பிரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பணத்தைச் சேமிப்பதில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் வீட்டின் சூழல் மேம்படும். உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆனால் நிதி ரீதியாக இந்த வாரம் கலவையாக இருக்கும். வருமானத்தை மனதில் வைத்து செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். பெரிய முன்னேற்றத்தைக் காணக்கூடும் மற்றும் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: புதன்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பண பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். வாழ்க்கைத் துணையின் மனநிலை சற்று மோசமாக இருக்கும். சிறு சிறு விஷயங்களில் உங்களுக்கிடையே வாக்குவாதங்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்களை கையாளும் போது, மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயத்தில் இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். வார இறுதியில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். மேலும் பழைய கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருப்பீர்கள். வேலையைப் பற்றிய கவலை அதிகரிக்கும். வெற்றி கிடைக்காவிட்டால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும். உங்கள் துணையின் நடத்தை உங்களை புண்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வார கிரக நிலைகள் உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்தபடி பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வியாபாரம் செய்பவர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளால் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படும். எதிர்மறை உணர்வை உணருவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பணப்பற்றாக்குறையால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆனால் உங்கள் பிரச்சனை விரைவில் தீரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரத்தில் மிகுந்த சோர்வை உணரக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை சொத்துக்களால் சில நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் உங்களின் கனவு விரைவில் நிறைவேறும். திருமணமாகாமதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் திருமணத்திற்கு ஒப்புதலையும் வீட்டில் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தினமும் யோகா மற்றும் தியானத்தை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை கலவையாக இருக்கும். அலுவலகத்தில் கூடுதல் பணிகளைத் தரலாம். வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தமான எதையும் சிந்திக்காமல் செய்யாதீர்கள். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கொஞ்சம் பலவீனமாக உணர்வீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்,
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பியிருக்காதீர்கள். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். அலுவலகத்தில் சிறிய வேலைகளைக் கூட கவனமாகச் செய்ய வேண்டும். இந்த வாரத்தில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அந்த அளவில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். சிறு வணிகர்களுக்கு இது நல்ல வாரமாக இருக்கும். உங்கள் பிள்ளையின் கல்வி குறித்த கவலைகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை



Click it and Unblock the Notifications