வார ராசிபலன் (16 July to 22 July 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது...

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஜூலை 16 முதல் 2023 ஜூலை 22 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 16 July 2023 To 22 July 2023 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் கவனம் பணத்தின் மேல் இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பெரியவர்களிடம் கண்ணியமாக இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடுத்த 7 நாட்கள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை பதட்டமாக இருக்கும். இந்த வாரத்தில் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கக்கூடும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். பெரிய பண பரிவர்த்தனைகளை செய்ய நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்கு ஏதேனும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற இதுவே சரியான தருணம். இந்த வாரம் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் சில வாரங்களாக வேலையில் மிகவும் பிஸியாக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுவார்கள். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆயினும் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் அந்த பிரச்சனைகளை முழு தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வீர்கள். திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். வார இறுதியில் திடீரென்று பணமும் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தால் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் அவசரத்தை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஏதாவது பொறுப்பை வழங்கியிருந்தால், நீங்கள் உங்கள் வேலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை வழங்க முடியும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் சில தடைகளை சந்திக்க நேரிடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அன்புக்குரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: புதன்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் பணிபுரிபவர்களுக்க்கு சற்று சவாலாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்த இந்த வாரத்தில் அழுத்தம் கொடுக்கப்படும். இந்த வாரம் மனதளவில் நன்றாக உணரமாட்டீர்கள். எதிர்மறை எண்ணங்களால் சூழ்ந்திருப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, இந்தக் காலகட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வார இறுதியில் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். மனதளவில் வலுவாக இருப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் எல்லா கவலைகளையும் மறந்து, நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வார இறுதியில், வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. இந்த வாரத்தில் உங்களுடைய சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருக்கும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில மாற்றம் ஏற்படும். உங்கள் அன்பானவருடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பண பலன்களைப் பெறக்கூடும். மேலும் இந்த வாரம் முக்கியமான நிதி முடிவை எடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை மிகவும் கவனமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்தவொரு நிதி முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் லாபம் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கும் நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணை மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருந்தால், இந்த வாரம் சில நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்துவீர்கள். ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: புதன்

Story first published: Sunday, July 16, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion