வார ராசிபலன் (16 April to 22 April 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்..

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஏப்ரல் 16 முதல் 2023 ஏப்ரல் 22 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 16 April 2023 To 22 April 2023 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் திருமண வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். இந்த வாரத்தில் பெரிய பலன்களை எதிர்பார்த்தால், ஏமாற்றத்தையே காணக்கூடும். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த வாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகளை பட்டியலிட்டு செய்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்கள் படிப்பில் தடைகளை மற்றும் சிரமங்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தினால் நல்ல நிலையை அடையலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மோசமான ஆரோக்கியத்தால் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண முயற்சித்தால், நற்பலனைப் பெறலாம். தொழிலதிபர்கள் அசாதாரண சூழ்நிலையை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் கிரக நிலைகள் சாதகமாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்புக்களைப் பெவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் சற்று மந்தமாக இருக்கும். ஆனால் போக போக சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் உயர் அதிகாரி ஏதேனும் வேலை கொடுத்தால், உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் பண விஷயத்தால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். கடன் வாங்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சற்று பிஸியாக இருக்கும். வணிகர்கள் பெரிய முதலீடுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பங்கு சந்தையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டு சூழல் நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பெரிய செலவுகளை செய்ய இந்த வாரம் உகந்தது அல்ல. வார இறுதியில், பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்: புதன்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கியமான விவாதம் செய்யலாம். உங்களின் படைப்பாற்றல் உயர் அதிகாரிகளால் ஈர்க்கப்படும். தொழிலதிபர்கள் சட்ட விஷங்களில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால், இழப்புக்களை சந்திப்பீக்ள். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு, பணிச்சுமை அதிகமாக இருக்கும். இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெற விரும்பினால், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தை இக்காலத்தில் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் திருமண வாழ்வில் அன்பு அதிகரிக்கும். பணி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்கள் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த வாரம் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். கோபத்தைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்களின் முக்கிய வேலைகள் பாதியில் நிற்கும் வாய்ப்புள்ளது. அவசரப்படாதீர்கள். வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் போகும். உங்களின் இந்த நடத்தையால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைமாட்டார்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருந்தால் இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிக பொறுப்புக்கள் உங்களுக்கு இந்த வாரத்தில் வழங்கப்படும். வியாபாரிகளுக்க கலவையான பலன்கள் கிடைக்கும். இந்த வாரம் மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படாதீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: புதன்

Desktop Bottom Promotion