Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
வார ராசிபலன் (10 September 2023 To 16 September 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர் 16 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்துடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். நிதி ரிதியாக, இந்த வாரம் கலவையாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆனால் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவாலாக இருக்கும். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளக்கூடும். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. பண விஷயங்களில் அதிர்ஷ்டம் சற்று குறைவாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதை நழுவவிட்டுவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு நன்றாக இருக்காது. குடும்பத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். ஆனால் விரைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டு. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், நெருக்கமான ஒருவரின் உதவியால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதி மறக்க முடியாததாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். சிக்கிய பணத்தை பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். வார இறுதியில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வணிகர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் பிஸியாக இருக்கும். வேலைப்பளு திடீரென்று அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் சாதகமாக இருக்கும். இருப்பினும், பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்யுங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் ஆழமாகும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் நிவாரணம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சிறு பிரச்சனைகளுக்கு உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். பரம்பரை தொழிலை செய்பவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பழைய சொத்தை விற்க நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தை தொந்தரவு செய்யும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் சில புதிய யுக்திகளை வகுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சுமாராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வார இறுதியில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஓய்வு எடுக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய வேலையில் திருப்தி இல்லை என்றால், உங்கள் வேலையை மாற்ற இதுவே சரியான நேரம். நிதி ரிதியாக நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்க சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்காது. தினசரி செலவுகளை சந்திப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். மன அழுத்தம் காரணமாக ஆரோக்கியமும் மோசமடையக்கூடும். வார இறுதியில் பயணம் செய்ய நேரிடலாம். இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். இந்த வாரத்தில் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.



Click it and Unblock the Notifications











