Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
வார ராசிபலன் (09 July to 15 July 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஜூலை 09 முதல் 2023 ஜூலை 15 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை ரீதியாக சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்க வேண்டுமானால், தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: புதன்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கவனக்குறைவு பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாரத்தின் நடுப்பகுதியில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். கூட்டாளருடன் பிரச்சனைகள் வரலாம். பணிபுரிபவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதால் சில சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும் நேர்மறையாகவும், அமைதியான மனதுடனும் வேலை செய்தால், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். முதலீடு செய்ய திட்டமிட்டால், கவனமாக உங்கள் முடிவை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. காதலிப்பவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமணம் செய்யும் எண்ணம் கூட எழலாம். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணம் மிகவும் இனிமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பணத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். மேலும் தேவையில்லாத கவலைகளால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே கவலைப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உணர்வு ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். இந்த வாரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரத்தில் ஒரு சிறப்பு நபரையும் சந்திக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதிக பணத்தை சேமிக்க முடியும். மேலும் திடீர் பணத்தையும் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். உங்களின் நேர்மறை எண்ணம் பணியிடத்தில் அனைவரையும் கவரும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். இது தவிர, பழைய கடனில் இருந்தும் விடுதலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பலவிதமான பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் விரும்பாவிட்டாலும் சில பெரிய பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மன கவலை அதிகரிக்கும். தந்தையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் எந்த வித அலட்சியமும் செய்ய வேண்டாம். குறிப்பாக நீங்கள் உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அவசரம் இழப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். உங்களின் எந்த ஒரு தடைப்பட்ட வேலையையும் முடிப்பதனால் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கிடையேயான அன்பு ஆழமடையும். அரசு வேலை செய்பவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். வார இறுதியில் உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டின் சூழல் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மன கசப்புகள் நீங்கும். நிதி ரீதியாக கலவையாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க நீங்கள் முயற்சி செய்தால், நீங்கள் ஏமாற்றத்தை உணரக்கூடும். இருப்பினும், தைரியத்துடனும் பொறுமையுடனும் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வேலைப் பார்வையில் இந்த வாரம் உங்களுக்கு பிஸியாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்



Click it and Unblock the Notifications











