Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வார ராசிபலன் (09 April to 15 April 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு கடன் வாங்கும் சூழல் வரலாம்...
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஏப்ரல் 09 முதல் 2023 ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். உங்களின் வேலைகள் திட்டமிட்டபடியே முடிக்கப்படும். ஆயினும் வேலையுடன் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த வாரத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் உங்களின் செலவுகள் குறையும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: புதன்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையை விட குடும்பத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாரத்தின் ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் போக போக நன்றாக இருக்கும். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தால், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மிகவும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். அது உங்கள் வேலையில் நன்கு தெரியும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் நல்ல மாற்றம் தெரியும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் சிறப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். நல்ல பண பலன்கள் கிடைக்கும். உங்களின் பணத்தை சரியாக பயன்படுத்தினால், பிரச்சனைகள் அனைத்தும் தீரும். பணியிடத்தில் உங்களிடம் சில கடினமான வேலைகள் ஒப்படைக்கப்படலாம். இதனால் சிறிது சிரமங்களை சந்திக் நேரிடும். ஆனால் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையால் வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் நிலை அலுவலகத்தில் வலுபெறும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை வீட்டின் சூழல் மோசமாக இருந்தால், இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். வேலைகளில் அலட்சியமாக இருக்காதீர்கள். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், நன்கு ஆராய்ந்த பின் செய்யுங்கள். நிதி ரீதியாக, செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: புதன்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் மனதளவில் வலுவாக இருப்பீர்கள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலதிபர்கள் பழைய தொடர்புகளால் நற்பலனைப் பெறுவார்கள். இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாரத் தொடக்கத்தில் பொறுப்புக்களின் சுமை அதிகரிக்கும். ஆனால் படிப்படியாக குறையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமண வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறுசிறு ஆதாயங்கள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பழைய நோய் ஒன்று மீண்டும் தொந்தரவு செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் கடந்த வாரத்தை விட சிறப்பாக இருக்கும். தடைபட்ட வேலைகள் சில இக்காலத்தில் முடிக்கப்படும். வேலை மாற்றத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ அவ்வளவு வெற்றியை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பருவ கால மாற்றங்களால் சிறுசிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். இந்த வாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் நிலுவையில் இருக்கும் பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்த்திடுங்கள். வார இறுதியில் விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை



Click it and Unblock the Notifications











