வார ராசிபலன் (08 October To 14 October 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 அக்டோபர் 08 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர் 14 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 08 October 2023 To 14 October 2023 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். ஆனால் போக போக சற்று சவாலானதாக இருக்கும். சில முக்கியமான வேலைகள் தடைப்படலாம். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இந்த வாரத்தில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வேலையை மாற்ற நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மோசமான சூழ்நிலைகள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் அனைவருடனும் சேர்ந்து செயல்பட்டால் நற்பலனைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். முடிவுகளை எடுக்கும் போது மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். வார இறுதியில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! சமீபத்தில் நீங்கள் நஷ்டத்தை சந்தித்திருந்தால், இந்த வாரத்தில் அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சற்று பிஸியாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பழைய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் தேவையற்ற கோபம் மற்றும் ஈகோவால் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சிக்கிய பணத்தை இந்த வாரத்தில் பெறலாம். மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, சோம்பலை கைவிட வேண்டும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அந்த அளவில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே காதல் இன்னும் ஆழமாகும். குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பான முடிவுகளை எடுத்தால், நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு இனிமையாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, உங்கள் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். கூட்டு வணிகம் செய்தால், நீங்கள் ஆபத்தான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் நல்ல பலன்களைப் பெற வாய்ப்பு உள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஊடகம், ஃபேஷன், அரசியல் போன்றவற்றில் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளிநாடு சென்று வேலை பெற வேண்டும் என்று கனவு கண்டால், இந்த வாரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். முதலீடு போன்றவற்றைத் திட்டமிட்டால் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சுமாராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். கவனக்குறைவுடன் இருந்தால், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். காதலைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு ஆழமாகும். உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு வலுவடையும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். சிந்திக்காமல் பெரிய செலவு செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் அன்றாட வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்காது. நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான எந்த வேலையையும் நன்கு சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். சிறு லாபத்தைப் பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனால் உங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பலவீனமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்களின் பிரச்சனைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வாரத்தின் நடுப்பகுதியில் வாழ்க்கைத் துணையின் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் திடீரென மோசமடையக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் இரவில் தாமதமாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. இது தவிர, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Story first published: Sunday, October 8, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion