Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
வார ராசிபலன் (07 May to 13 May 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கோபத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க போறாங்க!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 மே 07 முதல் 2023 மே 13 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் முடிக்கப்படாத பணிகளை முடிக்க மிகவும் கடினமாக உழைப்பீர்கள். வணிகர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் நீங்கள் முழுமையாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கோபம் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை கெடுக்கும். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். எந்த கடனையும் வார இறுதியில் திருப்பிச் செலுத்திவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: புதன்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். காதலர்களிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். லாபத்தை எதிர்பார்த்தால், ஏமாற்றமடைவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் குறித்த கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு நன்றாக இருக்கும். நிலுவையில் இருக்கும் வேலைகள் இந்த வாரம் வெற்றிகரமாக முடிக்கப்படும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் சோம்பலைக் கைவிட அறிவுறுத்தப்படுகிறது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். பொறுப்புக்களின் சுமை அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பாதகமான சூழ்நிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும். உங்களால் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்பவராக இருந்தால், இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வார இறுதியில் பயணம் செய்வீர்கள். சிறு ஆரோக்கிய பிரச்சனையையும் அலட்சியம் செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நீங்கள் இதுவரை பணிச்சுமை அதிகம் கொண்டிருந்தால், இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வார இறுதியில் திடீரென்று உங்களுக்கு பெரிய தொகை கிடைக்கும். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவழிப்பீர்கள். வேலையில் எந்த வித அலட்சியத்துடனும் இருக்க வேண்டாம். நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் பெரிய லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: புதன்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு சிறந்த வாரமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு சவாலாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் பட்ஜெட் போட்டு செலவழிக்க பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் உங்கள் வாழ்க்கைத் துணையை சந்தேகப்படுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பெரிய முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். நிதி நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் குறித்து கவலைப்படக்கூடும். தினமும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை பற்றிய கவலை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் பெரிய சவாலை சந்திக்க நேரிடும். சட்ட விஷயங்களில் எந்த வித அலட்சியமும் செய்யாதீர்கள், இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணத்தைப் பொறுத்தவரை கலவையாக இருக்கும். பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்தால் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. இது உங்கள் வாழ்க்கைத் துணையை கோபப்படுத்தலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, இரவு நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே வேலையில் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். முக்கியமாக மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். வேலையுடன் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
மீனம்
மீன ராசிக்காரர்களே! பணிபுரிபவர்கள் நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக கடினமாக உழைத்துக் கொண்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மதிப்புமிக்க பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை



Click it and Unblock the Notifications











