Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வார ராசிபலன் (07 April 2024 To 13 April 2024) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஏப்ரல் 07 ஆம் தேதி முதல் 2024 ஏப்ரல் 13 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை பணிச்சுமை சற்று குறைவாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்தக் வாரத்தில் பழைய கடன்களில் இருந்து விடுபடலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வார இறுதியில் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தினால் நல்லது. மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். வேலை செய்பவர்களுக்கு வாரத்தின் ஆரம்ப நாட்கள் மிகவும் பிஸியாக இருக்கும்.
இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வார இறுதியில், உங்கள் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேவையற்ற அலைச்சலையும் மன அழுத்தத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நடத்தையை சீராக வைத்துக் கொள்ள அறிவுத்தப்படுகிறது. உங்கள் குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் எதையும் செய்யாதீர்கள். வேலை சம்பந்தமாக பிரச்சனை வரலாம். வேலையில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை கொடுக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தேவையற்ற சண்டைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருங்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பல சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த வாரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணத்தையும் திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் மூதாதையர் சொத்துக்களை விற்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமாகவே இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பண பிரச்சனைகளை எதிர்கொண்டால், உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் எழும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த வாரத்தில் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.
அரசு வேலை செய்தால் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அவசர நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் அனைத்துப் பணிகளும் குறித்த நேரத்தில் முடிவடையும்.
உங்கள் செயல்திறனில் ஒரு பெரிய முன்னேற்றம் இருக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் ஏதேனும் மாற்றத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு செலவுகள் ஓரளவு அதிகமாக இருக்கும். சொத்து பிரச்சனைகளை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது சிக்கலை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும். சிறிய வேலைகளை கூட கவனமாக செய்ய முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு வாரத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்காது. நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் வணிக முடிவுகளை மிகவும் கவனமாக எடுத்தால் நல்லது. நீங்கள் கூட்டாண்மையுடன் வியாபாரம் செய்தால், உங்கள் கூட்டாளருடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுறது.
குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அதிக கவனம் செலுத்துவார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உறவில் நீங்கள் புதுமையை உணருவீர்கள். இந்த வாரம் வழக்கத்தை விட பண விஷயம் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை பேணுவீர்கள். இந்த சூழ்நிலையில் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குடும்பத்திற்கு அதிக நேரம் கொடுக்க முடியாது. உங்கள் மன அழுத்தத்தை குறைக்க விரும்பினால், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.
உங்கள் எல்லா வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். வாரத்தின் நடுப்பகுதியில் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் பயணம் வேலை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். பண விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். இந்த வாரம் நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் உங்கள் மீது அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் வேலை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால் இந்த நேரத்தில் உங்கள் பிரச்சனை நீங்கி உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும்.
வியாபாரம் செய்பவர்கள் சமீபத்தில் தங்கள் வியாபாரத் திட்டங்களில் நல்ல லாபத்திற்காக சில மாற்றங்களைச் செய்திருந்தால், நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். பழைய குடும்பக் கடனை அடைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நடத்தையை நீங்கள் மாற்ற வேண்டும். பல வகையான எண்ணங்கள் உங்கள் மனதில் வரலாம். எல்லா கவலைகளையும் மறந்து உங்கள் இலக்கில் கவனம் செலுத்தினால் நல்லது. வாரத்தின் நடுப்பகுதியில் திடீரென வேலைச் சுமை கூடும். உங்கள் மேலதிகாரி உங்களுக்கு அலுவலகத்தில் சில கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம்.
இருப்பினும், உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு பதவி உயர்வை வழங்கலாம். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திட்டங்களில் சில தடைகள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சில நாட்பட்ட நோய்களால் சிரமப்படுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக பெற்றோருடன் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் பரஸ்பர புரிதல் இன்னும் சிறப்பாக இருக்கும். எந்தவொரு தீவிரமான வீட்டுப் பிரச்சினையையும் தீர்ப்பதில், உங்கள் துணையின் உதவியையும் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் என்ன பொறுப்புகளை வழங்கினாலும், அவர்கள் அதை சிறப்பாக நிறைவேற்றுவார்கள்.
பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு சராசரியாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு செலவு செய்தால் நல்லது. பணம் தொடர்பான பெரிய வேலைகளைச் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் முடிவை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். அந்த வாரத்தில் நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் கூட்டு வணிகம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கூட்டாளர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. தனி தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு வெற்றி பெறும் மற்றும் இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் வளரும்.
பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இது தவிர, நீங்கள் நிறைய சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கிய பிரச்சனையால் உங்களின் திட்டங்கள் பாழாகலாம். வாழ்க்கையில் சில நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்களின் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் பலத்தால், அனைத்து விதமான நிதி பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவதில் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். இந்த சூழ்நிலையில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை உணருங்கள். உயர்கல்வி பெற முயற்சிக்கும் மாணவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











