இந்த வாரம் 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் ராஜயோகம் வரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கானு தெரிஞ்சிக்கோங்க!

செப்டம்பர் மாதத்தின் இந்த வாரம் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான வாரம். செப்டம்பர் 3 முதல் 6 வரையிலான வாரத்தில், வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பயணிக்கின்றன. செப்டம்பர் 4-ம் தேதி மாலை மேஷ ராசியில் கோள்களின் ஆட்சியாளரான வியாழன் சாய்வாக நகரப் போகிறார். டிசம்பர் 31 வரை வியாழன் இந்த நிலையில் இருக்கும். இதற்குப் பிறகு அது நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கும்.

கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6ஆம் தேதி வருகிறது. இந்த சுப வாரத்தில், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 12 ராசிகளுக்கும் 2023 செப்டம்பர் 3 முதல் 6 வரையிலான வாராந்திர பலன்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

Weekly Horoscope For 03 September 2023 To 09 September 2023 In Tamil

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் சில முக்கியமான வேலை தொடர்பான முடிவுகளை எடுக்கலாம். இந்த வாரம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.

உறவுகளில் இனிமை அதிகரிக்கும். இந்த நேரம் பணவரவு சிறப்பாக இருக்கும், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்வீர்கள். வார இறுதியில் நீண்ட பயணத்திற்கான வாய்ப்பும் அமையும். இந்த வாரம் சிறப்பு வாய்ந்த ஒருவரை காண வாய்ப்புள்ளது.

ரிஷபம்

புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் நினைத்த வேலை கிடைக்கும். நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், உங்கள் முயற்சி வெற்றியடையும். இந்த வாரம் பண விஷயத்தில் கலவையான பலன்கள் இருக்கும். சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது.

கடன் வாங்குவதை தவிர்க்கவும். இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் மீது அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

இந்த காலகட்டத்தில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் முக்கியமானது. கல்வித்துறையில் சிறப்பான வெற்றியை பெறலாம். நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறது.

வாழ்க்கை துணையுடன் உறவு வலுவாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள்.

கடகம்

கடக்க ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காதல் வாழ்க்கை பதட்டமாக இருக்கும். உங்களுக்கிடையில் நம்பிக்கை குறைவு ஏற்படும். இந்த நேரத்தில், உங்கள் உறவைப் பற்றி நீங்கள் குழப்பமடைவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சற்று கடினமாக இருக்கும்.

சிறு சிறு விஷயங்களுக்காக நீங்கள் சண்டையிடலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் வழக்கத்தை விட இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது, வேலையுடன் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

வாரத்தின் முதல் பாதி நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள். ஆனால் பிற்பாதி உங்களுக்கு சிறந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் நலனுக்காக செலவழிக்க போதுமான நேரம் இருக்கலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளை நீங்கள் முழுமையாக கவனிப்பீர்கள்.

மேலும் பெற்றோரின் பாசம் முழுமையாக கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று முழு நம்பிக்கையுடன் உங்கள் பணியைச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும், நிதிரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த வாரமாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் தோன்றும். உறவுகளில் இருந்த இடைவெளிகள் நீங்கும். இந்த நேரத்தை குடும்பத்துடன் நன்றாக செலவிடுவீர்கள்.

உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு தீவிரமடையும். உங்கள் முக்கிய முடிவுகளில் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவாலானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில்ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குழந்தைகளின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலையுடன் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை பராமரிக்க நீங்கள் போராட வேண்டியிருக்கும். இந்த வாரம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் உடல்நிலையும் சற்று பலவீனமாக இருக்கும்.

விருச்சிகம்

வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். சிறிய பிரச்சினைகளை புறக்கணிக்க வேண்டும், இல்லையெனில் உறவுகளில் இடைவெளி அதிகரிக்கலாம். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும், வாரத்தின் நடுப்பகுதியில் புதிய வருமானத்தையும் பெறலாம்.

இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு விரைவில் பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். வேலை சம்பந்தமான குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தனுசு

இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். பண விஷயத்தில் இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். இந்த நேரத்தில் பூர்வீக சொத்து சம்பந்தமான ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த காலகட்டத்தில் வேளையில் இருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

மகரம்

இந்த வாரம் உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இருப்பினும், அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் வார இறுதியில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இருப்பினும், விரைவில் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்

வாரத்தின் முதல் பாதி உங்களுக்கு சாதகமானதாக இருக்காது. இந்த நேரத்தில் நீங்கள் மனதளவில் மிகவும் சிரமப்படுவீர்கள். எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் கவலைகள் மற்றும் எண்ணங்களை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் மனைவியின் உடல்நிலை பலவீனமாக இருக்கலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த நேரத்தில் உங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம்

வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு முன்னேற்றத்திற்கான வழிகள் உங்களுக்கு திறக்கப்படும். நீங்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம், இருப்பினும், பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவும் வலுவடையும். உங்கள் மூதாதையர் சொத்துக்களை விற்க நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

Story first published: Sunday, September 3, 2023, 7:30 [IST]
Desktop Bottom Promotion