Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
வார ராசிபலன் (02 April to 08 April 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்...
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 ஏப்ரல் 02 முதல் 2023 ஏப்ரல் 08 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகும். வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எழும். வணிகர்கள் இக்காலத்தில் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பரம்பரை தொழிலில் இருப்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் முக்கிய முடிவுகளை பெரியவர்கள் ஆலோசனையுடன் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு வாரத்தின் ஆரம்பம் சற்று பரபரப்பாக இருக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் படிப்படியாக குறையும். நிதி நிலையை வலுப்படுத்த சமீபத்தில் ஒரு புதிய முடிவை எடுத்திருந்தால், அந்த முடிவால் இந்த வாரத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: புதன்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவை வலுவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமாக இருக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்களின் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் பதவியைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் உதவியால் பெரிய பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையாக இருக்கும். வேலையை மாற்ற திட்டமிட்டால், பழைய தொடர்புகளால் நல்ல பலனைப் பெறலாம். வணிகர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். அவசர முடிவால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். வீட்டுச் சூழலை மேம்படுத்த உங்கள் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். சிறு விஷயங்களுக்கு கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில் பணம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமணமானவர்களுக்கும் மிகவும் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். புதிய வருமானத்தைப் பெறக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சுமாராகவே இருக்கும். ஆனால் வார இறுதியில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: புதன்
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் விரும்பிய வெற்றியை அடைய புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். வீட்டின் சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பழைய நோய் ஒன்று தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் பணிபுரிபவர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நிதியைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க இந்த வாரம் ஏற்ற காலம். உங்களின் கடனை இந்த வாரத்தில் திருப்பி செலுத்துவீர்கள். உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். ஷாப்பிங்கிற்கு நிறைய செலவழிப்பீர்கள். இந்த வாரத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக கடினமாக உழைத்துக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த, செலவுகளை கட்டுப்படுத்துங்கள். பண பரிவர்த்தனைகளை யோசிக்காமல் செய்யாதீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். காதல் நட்பாக மாற வாய்ப்புக்கள் உள்ளன. வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் கலவையாக இருக்கும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். வெளிநாடு செல்ல விரும்பினால், இக்காலத்தில் முயற்சித்தால் நற்பலன் கிடைக்கும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் பெரிய வெற்றியைக் காணலாம். இந்த வாரத்தில் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையை வலுப்படுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: புதன்



Click it and Unblock the Notifications











