Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
வார ராசிபலன் (01 October 2023 To 07 October 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் முடியும்
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 அக்டோபர் 01 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர் 07 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேணுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த வாரத்தில் புத்திசாலித்தனமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். உங்களின் கடின உழைப்பு பெரிய வெற்றியைத் தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். ஆனால் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரையும் அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். உங்கள் நல்ல பேச்சு மற்றும் நடத்தைக்காக நீங்கள் நிறைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்கள் உறவுகளும் வலுவடையும். நிதி நிலை நன்றாக இருக்கும். அவசர அவசரமாக நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டாம். ஏற்கனவே நோய் இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை பிஸியாக இருப்பீர்கள். உடன் வேலை செய்வோருடன் தகராறு ஏற்பட்டிருந்தால், அது இந்த வாரத்தில் சரியாகும். இந்த வாரத்தில் வேலையைத் தவிர, உங்கள் நடத்தையிலும் கவனத்தை செலுத்த வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள். வார இறுதியில் நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் கடினமாக உழைத்து உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனக் குறைவாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டு சூழல் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். பணப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இருப்பினும் இந்த வாரத்தில் நிதி தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மேலும் இந்த பயணம் முக்கியமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிலர் உங்களை தவறாக வழிநடத்தலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் முழு கவனமும் வேலையில் இருக்க வேண்டும். எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். இல்லாவிட்டால், அது உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும். நிதி ரீதியாக, இந்த வாரத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சிலர் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். இந்த வாரத்தில் நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். நேரம் வரும் போது அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விவாதத்தில் ஈடுபடலாம். கோபத்துடனும், அவசரத்துடனும் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த எந்த முதலீட்டிலும் நல்ல பலன்களைப் பெறலாம். இது தவிர சொத்து சம்பந்தமான லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் உங்கள் திட்டப்படி முடிக்க முயற்சித்தால் நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் படிப்பு தொடர்பான முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால், நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்க வேண்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். இருப்பினும் கடனைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். மனதளவில் மிகவும் சிரமப்படுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் பழைய கடனில் இருந்து விடுபடலாம். இந்த வாரத்தில் நீங்கள் சில முக்கிய வணிக முடிவுகளை எடுப்பீர்கள். சிறிய விஷயங்களுக்கு கோபப்படும் உங்கள் பழக்கம் உறவுகளில் இடைவெளியை உண்டாக்கும். உங்கள் சொத்தை விற்க திட்டமிட்டிருந்தால், அதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக நன்றாக இருக்காது. அதிக செலவு செய்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் அன்புக்கு உரியவர்கள் பிரச்சனைகளை சமாளிக்க உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் கூடுதல் கவனமாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சில்லறை வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்கள் உறவு மேலும் வலுவடையும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். உற்சாகம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் உயர் அதிகாரிகளிடம் இந்த வாரத்தில் பேசி சரிசெய்தால், அப்பிரச்சனை தீரும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்காது. பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் அதிக பசியுடன் இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பபடுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











