Weekly Health Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனையை சிறிதும் அலட்சியப்படுத்தக்கூடாது..

Weekly Health Horoscope: ஒருவரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கமானது அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், கிரக நிலை அமைப்பின் விளைவு அவரவர் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும். அந்த வகையில் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்...

மே 27ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும், நீங்கள் நோயிலிருந்து விடுபடுவீர்களா அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் இப்போது பார்ப்போம்.

Weekly Health Horoscope From 27 May To 02 June 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்களின் கவனக்குறைவால் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சுமையாக உணர்வீர்கள். உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. அதுமட்டுமின்றி போதுமான ஓய்வும் எடுக்க வேண்டும். உங்களை மனரீதியாக வலுவாக வைத்திருக்க, தியானத்தின் உதவியைப் பெறலாம். வாழ்க்கையில் வெற்றிபெற, ஒருவருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் மீது அதிக பொறுப்புகள் சுமத்தப்படும். எனவே, உங்கள் மீது அதிக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில இக்கட்டான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். வேலையுடன், உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது. அதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். வீட்டு வைத்தியத்தை விட்டுவிட்டு உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக நீண்ட நாட்களாக ஏதேனும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்தால், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சில காலமாக உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்பட்டு வந்தால், இந்த நேரத்தில் நீங்கள் பெரும் நிவாரணம் பெறலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு, நீங்கள் நன்றாக உணருவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் முக்கியமான வேலைகளில் நீங்கள் சரியாக கவனம் செலுத்த முடியும். மன அழுத்தம் குறையும். உங்கள் அன்றாட வழக்கத்தில் சில முக்கியமான மாற்றங்களை செய்தால், விரைவில் நல்ல பலனைத் தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில் உணவுக் கோளாறுகளால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். வயிறு சம்பந்தமான சில நாள்பட்ட நோய்கள் மீண்டும் வெளிவர வாய்ப்புள்ளது. உங்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வதோடு, உணவில் சிறப்பு கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நீங்கள் வறுத்த,பொரித்த அல்லது காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் நேரத்திற்கு உணவு உண்ண பழக வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிறிய பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. முதலில் நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். இது தவிர, தேவையற்ற கவலை மற்றும் கோபத்தைத் தவிர்க்கவும். தினந்தோறும் லேசான உடற்பயிற்சி செய்யவும். உங்களை மனரீதியாக வலுவாக வைத்திருக்க தியானத்தின் உதவியை நாடலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில், நீங்கள் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணருவீர்கள். மேலும், உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். இதன் விளைவாக நீங்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதன் விளைவாக நீங்கள் நல்ல முடிவுகளையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். உங்கள் நேர்மறை எண்ணம் அனைவரையும் கவரும். நல்ல ஆரோக்கியத்தின் விளைவு உங்கள் வேலையிலும் தெரியும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களது அனைத்து வேலைகளையும் இரு மடங்கு வேகமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் மன உளைச்சல் குறைந்து, நெருங்கியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்த உங்களால் முடிந்த முயற்சிகளைத் தொடர்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில் பெரிய உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆனால், உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். முடிந்தால், உங்கள் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, உங்களுக்குப் பிடித்த இடத்துக்கு சென்று வாருங்கள். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு உங்கள் ஆற்றல் மட்டமும் அதிகரிக்கும். வார இறுதியில், உங்களுக்கு பிடித்த உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிலேயே சுவையான உணவை சமைத்து சாப்பிட்டால் சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள் என்பதால் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் எடையும் குறையும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் தினசரி வழக்கத்தில் சில புதிய உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். நீங்கள் முடிந்தவரை பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில், உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்பட நேரிடலாம். உங்களுக்கு தலைவலி, உடற்சோர்வு, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் இருக்கலாம். இது தவிர, உங்களுக்கு ஒவ்வாமை அல்லது நோய்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முகு உடற்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் இருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலை உணர்வீர்கள். மகிழ்ச்சியாக இருக்க பல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மனரீதியாகவும் நன்றாக உணருவீர்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் வலுப்படுத்த தேவையான சில நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், இந்த காலகட்டத்தில் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெற்றிடலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் முற்றிலும் நன்றாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. இந்த காலகட்டத்தில் நீங்கள் சில உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திட்டங்கள் அனைத்தும் தடைபடும். மெதுவாக இருந்தாலும் நீங்கள் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆனால், சிறிதும் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு கண்கள், வயிறு அல்லது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் இருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அது உடல்நலத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும்.

Story first published: Monday, May 27, 2024, 6:00 [IST]
Desktop Bottom Promotion