Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
இந்த வாரம் இந்த ராசிக்காரங்க உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது...
Weekly Health Horoscope: ஒருவரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கமானது அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், கிரக நிலை அமைப்பின் விளைவு அவரவர் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும். அந்த வகையில் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்...
ஜூன் 03 ஆம் தேதி முதல் ஜூன் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும், நீங்கள் நோயிலிருந்து விடுபடுவீர்களா அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் இப்போது பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பது உங்களுக்கு நல்லதல்ல. இந்த காலகட்டத்தில், வேலை காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அதனால், உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது. உடல்நலக்குறைவு உங்கள் வேலையை்ப பாதிக்கும். எனவே, ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் நல்லது. உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் இருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை வலுவாக வைத்திருக்க, நீங்கள் யோகா மற்றும் தியானத்தின் உதவியைப் பெற வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையானதாக இருக்கும். நீங்கள் வழக்கமான முறையைப் பின்பற்றினால், நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும். இது தவிர, உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த வாரம் கர்ப்பிணிப் பெண்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக படிக்கட்டுகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலை உணருவீர்கள். மேலும், நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். அதற்கான சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் சில பழைய நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். நீங்கள் மனரீதியாகவும் நன்றாக உணருவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் எல்லா வேலைகளையும் இரண்டு மடங்கு வேகமாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் சில புதிய உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வழக்கமான சோதனை செய்யவில்லை என்றால், இந்த நேரம் அதற்கு சாதகமானது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில் உங்கள் கவனக்குறைவால் உடல்நிலை மோசமடையலாம். ஆரோக்கியத்துடன் விளையாடாமல் இருந்தால் நல்லது. தேவையில்லாத விஷயங்களில் கோபப்படும் உங்கள் பழக்கம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். சிறிய விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தில் கலவையான முடிவுகளைத் தரும். உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எலும்புகள், வயிறு அல்லது கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வதைத் தொடரவும். உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்க முயற்சியுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில், நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் நன்றாக உணர்வீர்கள். நீங்கள் முழு நம்பிக்கையுடன் உங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் முக்கியமான பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியும். இருப்பினும், நீங்கள் ஆறுதலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை விஷயத்தில் அதிக மனஅழுத்தம் வேண்டாம். உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க முயற்சிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சற்று கடினமாகவே இருக்கும். கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக உங்கள் உடல்நிலை மோசமடையலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாக உணருவீர்கள். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு புதிய வழக்கத்தைத் தொடங்க முயற்சிப்பது நல்லது. முதலில், உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். ஒவ்வொரு நாளும் திறந்த வெளியில் நடைபயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் நீங்கள் சமீபத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்திருந்தால், அதன் நல்ல முடிவுகளைப் பெறலாம். சில பழைய நோய்களில் இருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம். அதனால், நீங்கள் நன்றாக உணருவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் மன அழுத்தமும் குறையும். உங்கள் உணவுப் பழக்கங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, டீ, காபி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் நீங்கள் உடல்நலம் தொடர்பான சிறு சிறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக இந்த மாறிவரும் பருவ நிலையால், உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. இந்த நேரத்தில் உங்கள் நீரிழப்பு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடன், நீங்கள் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணருவீர்கள். உங்களின் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம். அதிகமாக வறுத்த, பொரித்த மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும். இது தவிர, அதிக அளவில் தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும். ஆனால் உங்களின் கவனக்குறைவால் உங்கள் உடல்நிலை திடீரென மோசமடைய வாய்ப்புள்ளது. முதலில் நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை வழக்கமாக கொள்ள வேண்டும். இது தவிர, இரவு நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் போதுமான உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் பலவீனம் அதிகரிக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்களுக்காக நீங்கள் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். வேலையுடன் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தால், உங்கள் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்காவது வெளியே சென்று வாருங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு சிறிய மாற்றம் தேவை. அப்போது தான் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மீண்டும் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கலாம். இது தவிர, தேவையற்ற கவலைகளிலிருந்தும் விலகி, அடிக்கடி கோபப்படுவதைத் தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications