Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 26 மே 2024 முதல் 01 ஜூன் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. பணியிடத்தில் மற்றவர்களுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களிடம் எதையும் கேட்காமல் தேவையில்லாமல் பேசாதீர்கள். ஏனெனில் சில சமயங்களில் உங்களின் தலையீடு உங்கள் உயர் அதிகாரிகளை தொந்தரவு செய்யலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருங்கள். தொழிலதிபர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் வேலையை சிறப்பாக செய்து முடிக்க மற்றவர்களுடன் நன்கு பேசுங்கள். இந்த வாரம் நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்பதை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலைகளை செய்ய அச்சம் கொள்ள வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் உங்கள் வேலையில் நேர்மையாக இருந்தால் உங்கள் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு நன்றாக இருக்காது. ஆனால் உங்களின் திறமைகள் சோதிக்கப்படும். அதன் பின் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் இந்த வாரத்தில் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் உங்களின் வியாபாரம் விரிவடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொடர்பான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். வாரத்தின் இரண்டாம் பகுதியில், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய விஷயங்களை மேற்கொள்ள அச்சம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அதன் முடிவுகளானது சிறப்பாகத் தான் இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் வியாபாரத்தில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்கு படித்து பார்க்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பல முக்கியமான வேலைகள் முடிக்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கும். வேலையை மாற்ற நினைத்தால், அதை இந்த வாரத்தில் செய்யலாம். ஏனெனில் இந்த வாரம் உங்களுக்கு பல ஆஃபர்கள் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த வாரத்தில் பல வேலைகள் தேடி வரும். மருத்துவ துறைல் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிக்கலான வழக்குகளை சந்திக்க நேரிடும். ஐடி வல்லுநர்கள், மார்கெட்டிங் வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வணிகர்கள் தங்கள் கூட்டாளருடன் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். இந்த வாரத்தில் அவசரமாக எந்த வணிக முடிவுகளையும் எடுத்துவிடாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் சில எதிர்பாராத நிகழ்வுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். மார்கெட்டிங் மற்றும் விற்பனை துறையில் இருப்பவர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஐடி துறையில் இருப்பவர்கள் புரோகிராமிங்கில் சிறு தவறுகளால் சிரமப்படுவார்கள். வங்கி, மீடியா, இசை, சமையல் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் பயனுள்ளதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் உங்களுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. தொழிலில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒரு கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருந்தால், இந்த வாரத்தில் உங்களிடம் கடினமான புராஜெக்ட்டுகள் வழங்கப்படும். வர்த்தகர்கள் தங்கள் உரிமங்களில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்தால் அதை நம்பிக்கையுடன் சமாளியுங்கள். புதிய தொழில் திட்டங்களையோ, கூட்டாண்மைகளையோ தொடங்க வேண்டாம். எந்த முடிவையும் உடனே எடுக்காதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை உங்கள் உயர் அதிகாரிகள் கவனிப்பார்கள். பணியிடத்தில் உள்ள பிரச்சனைகளை தள்ளிப் போடாமல் உடனே தீர்க்க முயற்சி செய்யுங்கள். மீடியா, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், ஆட்டோ இன்ஜினியரிங் துறையில் இருப்பவர்கள், தங்கள் திறனை வெளிக்காட்டும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முடியாமல் அவதிப்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க, பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். உங்கள் மனதில் உள்ள ஐடியாக்களை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் வெளிப்படுத்த தயக்கம் கொள்ளாதீர்கள். உங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்தினால், உங்கள் இலக்கை அடைந்து நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











