Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 02 ஜூன் 2024 முதல் 08 ஜூன் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்பினால் மட்டுமே வெற்றியைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் முடிக்க முடியாத வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் இந்த வாரம் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். வேலையில் வெற்றியைப் பெறாமல் போவது உங்களுக்கு மனதில் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும். அதன் விளைவாக தவறான முடிவை எடுக்க வேண்டி வரும். இருப்பினும் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெற அனுபவமிக்க நபரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரம் உங்கள் வேலையில் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலைக்காக தேர்வுகளை எழுதியிருந்தால், நல்ல வெற்றியைப் பெற்று, மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய வேலை தேடி வரலாம். முக்கியமாக வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றி பெறுவார்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருப்பதால், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வுகளை எழுதியிருந்தால், சிறப்பான வெற்றியை பெற்று, நல்ல வேலையைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் வேலையில் வெற்றி பெற தாமதமாகும். அதற்காக மனம் தளராதீர்கள். கடினமாக உழைப்பதன் மூலம் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று சுமாராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் உங்கள் வேலைகளில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இந்த வாரத்தில் வியாபாரிகளின் கடின உழைப்புக்கான நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அரசு வேலைக்காக எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications