Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
விஷ யோகத்தால் மே 26 முதல் மே 29 வரை இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. உஷாரா இருங்க..
Vish Yoga In Tamil: வேத ஜோதிடத்தில் விஷ யோகம் அதன் பெயருக்கு ஏற்ப மிகவும் மோசமான மற்றும் அசுபமான யோகங்களில் ஒன்றாகும் மற்றும் இது மோசமான வழிகளில் ஒருவரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக விஷ யோகமானது சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையின் போது அல்லது ஒருவருக்கொருவர் முழு அம்சத்தில் இருக்கும் போது உருவாகிறது. பொதுவாக சனியும், சந்திரனும் எதிரிகள்.

இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைந்து பயணித்தால், அதன் விளைவாக நற்பலன்களை விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். ஏற்கனவே மே 13 ஆம் தேதி சனி மற்றும் சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவானது.
தற்போது இரண்டாவது முறையாக, அதுவும் 13 நாட்களில் மீண்டும் விஷ யோகம் உருவாகிறது. அதுவும் இரண்டாவதாக உருவாகும் விஷ யோகமானது சனி மற்றும் சந்திரனின் முழு அம்சத்தில் உருவாகிறது.
மே மாதத்தில் இரண்டாவதாக உருவாகும் விஷ யோகமானது மே 26 ஆம் தேதி இரவு 8.49 மணிக்கு தொடங்கி, மே 29 ஆம் தேதி இரவு 8.55 மணிக்கு முடிவடைகிறது. எனவே விஷ யோகத்தின் தாக்கமானது 3 நாட்கள் வரை இருக்கும். இந்த 3 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்.
விஷ யோகம் எம்மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?
விஷ யோகமானது உடல் மற்றும் மனதை பாதிக்கும் வகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் இந்த யோகமானது மாணவர்களின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, இந்த யோக காலத்தில் மாணவர்கள் தேர்வுகளை எழுதினால், அவர்கள் தோல்வியை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
அதோடு, இந்த யோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மோசமான பாதிப்பை உண்டாக்கும். திருமணமானவர்கள் மற்றும் காதலிப்பவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் மற்றும் தாயுடனான உறவுகள் பாதிக்கப்படும்.
இப்போது விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிகமாக பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை அறிந்து, விஷ யோக காலத்தில் சற்று கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மே 26 ஆம் தேதி உருவாகும் விஷ யோகத்தின் போது சந்திரன் சிம்ம ராசியிலும், சனி கும்ப ராசியிலும் உள்ளனர். அதாவது இந்த யோகமானது அம்சத்தால் உருவாகிறது. எனவே இந்த விஷ யோகத்தின் தாக்கம் இரண்டு ராசிகளின் மீது சற்று தீவிரமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த விஷ யோக காலத்தில் மன அமைதியிழந்து இருப்பார்கள் மற்றும் வீட்டு சூழல் உங்களுக்கு மிகுந்த அலைச்சலை உண்டாக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் தாயாரின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் அதிகரித்து, திருமண வாழ்க்கை மோசமாகும். நிதி நிலையும் மோசமாக பாதிக்கப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் விஷ யோக காலத்தில் யாரிடடும் பெரிய அளவில் கடன் வாங்குவதையோ அல்லது முதலீடுகளை செய்வதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பணப் பிரச்சனையில் சிக்கக்கூடும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களின் ஆரோக்கியமும் சற்று பாதிக்கப்படலாம். பணியிடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையால் திருப்தியடையாமல் போகலாம். இக்காலத்தில் மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனித்து பேச அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications