விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் தெரியுமா?.. அடேங்கப்பா இத்தனை அவர் வீட்டில் நிற்குதா?

சென்னை: நடிப்பில் மும்முரமாக இருந்த விஜய்; அவரது ரசிகர்களுடைய கோரிக்கையின்படி இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் அவர் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படமும் திரையில் வெளியாகவிருக்கிறது. அந்தப் படம்தான் அவரது நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது.

கோலிவுட்டில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதன்மையானவர் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் பிஸ்னெஸில் பட்டையை கிளப்புபவை. கடைசியாக வெளியான கோட் படம்கூட பெரும்பாலான ரசிகர்களை கவரவில்லை. ஆனால் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாக படத்தை தயாரித்த நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதே நிலைமைதான் கோட்டுக்கு முன்னர் அவர் நடித்த லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்களுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay s Luxury Car Collection 9 Expensive Cars Owned by Thalapathy

அரசியலில் விஜய்: இதற்கிடையே அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார்; பிறகு மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். அதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை.மாறாக அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது அவரது கட்சி.

திமுக மீது அட்டாக்: கட்சி தொடங்கியிருக்கும் அவர் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை டார்கெட் செய்து அட்டாக் செய்துவருகிறார். அதற்கு திமுகவினரும் தகுந்த பதிலடி கொடுத்துவருகிறார்கள். இதன் காரணமாக திமுக Vs தவெக என்ற நிலைமையும் உருவாகியிருக்கிறது. அவரும் தான் ஏறும் அரசியல் மேடைகளில் எல்லாம் தங்களுக்கும், திமுகவுக்கும்தான் தேர்தலில் போட்டி என்று விடாமல் கூறிவருகிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்றே அரசியலிலும் ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஜனநாயகன் திரைப்படம்: இதற்கிடையே அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோதே இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறிவிட்டார். அதன்படி கடைசி படம் என்று சொல்லப்படும் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஜனவரி ஒன்பதாம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இப்படி சினிமா, அரசியல் என பிஸியாக இருக்கும் தளபதி என்னென்ன கார்களை வைத்திருக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

விஜய்யின் கார் லிஸ்ட்: அவரிடம், ரோல்ஸ் ராய்ஸ், Range Rover Evoque, Ford Mustang, Volvo XC 90, Mereceds Benz GLA, BMW 5 Series and 3 Series, Mini Cooper s, Innova Crysta, Maruthi Celerio ஆகிய 9 கார்கள் இருக்கின்றனவாம். இவற்றில் ரோல்ஸ் ராய்ஸின் விலை மட்டும் ஏழு கோடி ரூபாய். ஃபோர்டு கார் 75 லட்சம் ரூபாயும், வால்வோ கார் 96 லட்சம் ரூபாயும், பென்ஸ் 50 லட்சம் ரூபாயும், 64 லட்சம் ரூபாயும் ஆகும்.

Story first published: Tuesday, December 16, 2025, 16:47 [IST]
Desktop Bottom Promotion