Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சுக்கிரன் உருவாக்கும் தன ராஜயோகத்தால் மே 30 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது...
Venus Transit Make Dhan Rajyoga: வேத ஜோதிடத்தில், அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 30 முதல் 36 நாட்கள் வரை இருக்கும். இதனால் ஒவ்வொரு மாதமும் சுக்கிரன் ராசியை மாற்றுவார்.
இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இவர் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மே 30 ஆம் தேதி இரவு 07.39 மணிக்கு சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைகிறார்.

சுக்கிரன் கடக ராசியில் நுழைவதால் தன ராஜயோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, சுக்கிரன் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் இருக்கும் போது அல்லது ஜாதகத்தில் துலாம் மற்றும் மீன ராசியில் இருக்கும் போது தன ராஜயோகம் உருவாகிறது.
இப்படி சுக்கிரனால் உருவாகும் தன ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அபரிமிதமான நிதி பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இதுவரை குழப்பம் நிறைந்த மேஷ ராசிக்காரர்களின் குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவார். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒருங்கிணைப்பும் அதிகரிக்கும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால், உறவுகள் இனிமையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நிதி ரீதியாக இக்காலத்தில் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கவுள்ளது. பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடனான உறவு மேம்படும். முக்கியமாக காதல் உறவுகளில் நெருக்கமும், பிணைப்பும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமான தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையில் நெருக்கமும், காதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இதுவரை பிரச்சனை இருந்தால், இனிமேல் உங்கள் உறவு வலுவாகும். கடக ராசியின் லக்ன வீட்டில் சுக்கிரன் இருப்பதால், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications