Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
சுக்கிரன் உருவாக்கியுள்ள கஜலட்சுமி யோகம்: இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேரும்...
Venus Transit Made Gajalakshmi Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் தருணத்தில் யோகங்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அந்த வகையில், அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் கடக ராசியில் நுழைந்ததால், கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செல்வத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். அதுவும் சுக்கிரனால் உருவாகியுள்ள கஜலட்சுமி யோகத்தால், சில ராசிக்காரர்களின் கையில் செல்வம் அதிகரித்து, செல்வந்தராகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உள்ளார். இந்த முதல் வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக பண விஷயத்தில் இக்காலமானது மிகவும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி யோகமானது மிகவும் சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. இக்காலத்தில் வியாபாரம் செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஆர்டரை பெறக்கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகமானது எதிர்பாராத பல நிதி நன்மைகளைத் தரப் போகிறது. முக்கியமாக இக்காலத்தில் உங்களின் யோசனைகள் நல்ல பாராட்டைத் தரும். புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications