Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சுக்கிர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்...
Venus Transit In Virgo on November 2023: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவான சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, வாழ்வின் இந்த அம்சங்களில் எல்லாம் அதன் தாக்கம் தெரியும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் தீபாவளிக்கு முன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் நவம்பர் 03 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். கன்னி ராசியில் சுக்கிரன் சற்று பலவீனமாக இருப்பார்.

இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் நவம்பர் 03 முதல் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் உறவுகளில் சற்று எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சவால்களை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் தவிர்த்திடுங்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு குறைவான லாபம் கிடைக்கும். சிலருக்கு பண இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுலகத்தில் பல ஏற்றஇறக்கங்களை சந்திக்கலாம்.
உங்கள் வேலையில் நீங்களே திருப்தியடையாமல் போவீர்கள். உடன் வேலை செய்வோரின் கருத்துக்களை கேட்டு நடப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது உங்களுக்கே பெரிய தீங்கை விளைவித்துவிடும். வியாபாரிகளுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், செலவுகளில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்தில் பலவிதமான தடைகள் ஏற்படலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உறவுகளில் விரிசல் ஏற்படவும் வாயப்புள்ளது.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். உங்கள் வேலையில் நீங்கள் மகிழ்ச்சியடையமாட்டீர்கள். வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு எவ்வித லாபமும் கிடைக்காது. இப்பெயர்ச்சியால் கடின உழைப்பிற்கான பலனைப் பெற முடியாது. எதிரிகள் உங்களை வீழ்த்துவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications