Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சுக்கிர பெயர்ச்சியால் நவம்பர் 03 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...
Venus Transit In Virgo On 03 November 2023: நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார்.
மிகவும் மங்களகரமான கிரகமான சுக்கிரன் மாதம் ஒருமுறை, அதாவது 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் போது ஒருவரது நிதி நிலையிலும், காதல் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.

இப்படிப்பட்ட சுக்கிரன் நவம்பர் 03 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். புதன் ஆளும் கன்னி ராசியில் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள், இந்த சுக்கிர பெயர்ச்சியால் தீபாவளிக்கு முன்னரே நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் ராசிக்காரர்கள் வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சுக்கிரனின் அருளால், வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்களின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் அருளால் கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 வது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குறைந்த முயற்சியிலேயே நல்ல வெற்றியைப் பெறுவார்கள். எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் இப்பெயர்ச்சிக்கு பின் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதமாக வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண பலன்களைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வாழ்க்கை திருப்தியாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications