Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரங்க நிறைய பண பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..
Venus Transit In Virgo On 03 November 2023: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் ஒருவரது நிதி நிலை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் நவம்பர் 03 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். கன்னி ராசியில் சுக்கிரன் பலவீனமாக இருப்பார்.

இதனால் இந்த சுக்கிர பெயச்ச்சியால் நற்பலனை விட கெடுபலன்கள் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது கன்னி செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான சவால்களை சந்திப்பார்கள். எதிரிகள் உங்களை வீழ்த்த காத்துக் கொண்டிருப்பார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வாழ்க்கை சற்று சிரமமாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்காமல் போகும். வணிகர்கள் பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமான தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவைப் பெறுவார்கள். தம்பதிகள் தங்கள் துணையுடன் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சிலர் புதிய வாகனத்தை வாங்கலாம். உங்களின் புகழ் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷடத்தின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் செயல்களில் சிறந்ததை வழங்கி, சிறந்தவர்களாக திகழ்வார்கள். நண்பர்களின் ஆதரவு இருக்கும். எதிரிகள் உங்களை கண்டு அஞ்சுவார்கள். நிதி நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நிறைய ஷாப்பிங் செய்வீர்கள். காதலிப்பவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் ஆளுமை பிரகாசமாக இருக்கும். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதகமான மாற்றங்களை காண்பார்கள். இக்காலத்தில் ஆளுமை மேம்படும். ஆடம்பர பொருட்களில் நிறைய முதலீடு செய்வீர்கள்.
பாலுணர்ச்சி அதிகமாக இருக்கும். இந்த உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் செயல்களை கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். இக்காலத்தில் வாழ்க்கையானது ஆடம்பரமாகவும், வசதியாகவும் இருக்கும். இக்காலத்தில் சுயக்கட்டுப்பாடு மிகவும் தேவை. திருமணமானவர்களுக்கு தங்கள் துணையுடனான உறவு வலுவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களின் நிதி நிலை வலுவடையும். பல வழிகளில் பணம் வந்து சேரும். வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் தொழில் வாழ்க்கையில் சிரமங்கள் இருக்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும். இந்த காலத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். அதிக பொறுமை தேவைப்படும். மற்றவர்களுடன் விரோதம் அதிகரிக்கலாம். மொத்தத்தில் எச்சரிக்கையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதங்கள் வரலாம்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஆசைகள் நிறைவேறும். எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், நகைகள் வாங்குவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மேலும் குடும்ப வாழ்க்கையும் அமைதியாகவும், இணக்கமாகவும் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், இது குடும்பத்தின் நிதி நிலையை பாதிக்கலாம். மாணவர்கள் இக்காலத்தில் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் திருமணமானவர்கள் தம்பதிகளுடன் தவறான புரிதல்கள் மற்றும் சண்டைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சமூகத்தில் நற்பெயரை பராமரிக்க முயற்சிக்க வேண்டும். தொழில் ரீதியாக, வெற்றியைக் காண அதிக உழைப்பும் முயற்சியும் தேவை. சிலருக்கு பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications