Latest Updates
-
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: பிப்ரவரி 20 முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப் போகுது...
Venus Transit In Thiruvonam Nakshatra On February 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அதோடு அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணி என்பதால், வாழ்வின் இந்த அம்சங்களில் மாற்றங்களை காணக்கூடும்.
தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசியில் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் சனியின் ராசிக்குள் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.

அதே சமயம் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே வேளையில் திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். இப்போது திருவோணம் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரன் திருவோண நட்சத்திரத்திற்கு செல்வால், மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வணிகர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நிதி நிலை நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது நல்ல பண வரவைத் தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீட்டு வசதிகள் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களை கொண்டு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications