Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: மே 19 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகுது..
Venus Transit In Taurus On 19 May 2024: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சுக்கிரன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2024 மே 19 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். சுமார் 1 வருடத்திற்கு பின் சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் சற்று சிறப்பாக காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். இப்போது சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம் அல்லது எதிர்பார்த்த சம்பளத்துடனான வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். மேலும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். வியாபாரம் செழிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சமூகத்தில் மற்றும் செல்லும் இடங்களில் நல்ல மரியாதை கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தால், மே 19-க்கு பின் நல்ல வேலை கிடைத்து முடிவுக்கு வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தைகள் பாக்கியம் கிடைக்கலாம். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications