1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இன்று முதல் ஜூன் 12 வரை இந்த ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்

Venus Transit In Taurus 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதோடு, மற்றவர்களை ஈர்க்கும் அழகுடன் இருப்பார். இப்படிப்பட்ட சுக்கிரன் மே 19 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்த ரிஷப ராசியில் சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி வரை இருந்து பின் மிதுன ராசிக்குள் நுழைவார்.

Venus Transit In Taurus On 19 May 2024 Effects On 12 Zodiac Signs In Tamil

சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக புதிய வேலையை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்பீர்கள். மற்றவர்களை அதிகம் நம்புவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றப்படலா. மாணவர்கள் சிறப்பான பலனைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். அவசரமாக எந்த ஒரு வேலையையும் முடிக்க நினைக்காதீர்கள். உங்கள் ஆசைகளையும் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக இடமாற்றத்திற்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அது கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். சுக்கிரனின் அருளால் நிதி நிலை வலுவடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடைபெறும். திடீரென்று பணம் தேடி வரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை பார்ப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை கண்டறியலாம்.

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்கார்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம்கிடைக்கும். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். பணத்திற்கு பஞ்சம் ஏதும் இருக்காது. வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். திடீரென்று பணம் தேடி வரும். காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். சுக்கிரனின் அருளால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களும் கிடைக்கும். இக்காலத்தில் நன்கு சிந்தித்து முதலீடுகளை செய்தால், எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்கள் பேச்சே உறவை முறித்துவிடும்.

Desktop Bottom Promotion