Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ரிஷபம் செல்லும் சுக்கிரனால் மே 2 வரை இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் நிறைய லாபத்தை பாக்க போறாங்க..
Venus Transit in Taurus on 06 April 2023: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் ஆடம்பரம், அழகு, செல்வம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே சுக்கிரனின் ராசி மாற்றமானது ஒருவரது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
2023 ஏப்ரல் 06 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த ரிஷப ராசியில் மே 2 ஆம் தேதி வரை இருந்து, பின் மிதுன ராசிக்கு செல்வார்.

சுக்கிரன் ரிஷப ராசியில் பயணிக்கும் போது, அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகுவதோடு, தொழிலில் நல்ல வெற்றியும் முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இதுவரை சிக்கிக் கொண்டிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு கிடைக்கும். பல முக்கியமான முடிவுகளை எளிதில் எடுப்பீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மேலும் இந்த பயணம் நல்ல ஆதாயத்தையும் தரும். நிதி நிலை வலுவாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சு இக்காலத்தில் மற்றவர்களின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சு தொடர்பான துறையில் வேலை செய்பவர்கள், இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வருமானத்தில் அதிகரிப்பைக் காணலாம். வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் கிடைக்கும். சொத்துக்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களின் நிலை மேம்படுவதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். இக்காலத்தில் தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் காதலிப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
தொழிலில் நல்ல வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு, அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications