Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் ஏப்ரல் 6 முதல் இந்த ராசிக்காரர்களின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகப் போகுது...
நவகிரகங்களில் ஆடம்பரம், செல்வம் செழிப்பு, காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல ஆடம்பரமான மற்றும் காதல் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார். எனவே ஒருவரது செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு சுக்கிரனின் அருள் இருக்க வேண்டும். இந்த சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சுக்கிரன் 2023 ஏப்ரல் 06 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த ரிஷப ராசியில் சுக்கிரன் மே 02 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் மே 02 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் பேச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமாக இருக்கும். இக்கால கட்டத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலத்தில் முதலீடு செய்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்களின் தைரியம் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் எதிரிகளால் உங்களை வீழ்த்த முடியாது. உங்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு அன்பு கிடைக்கும்
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதில் தடைகளை சந்திக்கக்கூடும். காதல் விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குறிப்பாக இக்காலத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வருமானம் கிடைக்கும். காதல் விஷயத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் பணத்தை அதிகம் சேமிக்க முடியும். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன மற்றும் அந்த பயணங்களால் நல்ல பலன்களும் கிடைக்கும். குடும்பத்தினரின் உதவியுடன் முக்கிய வேலையை முடிப்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீடு கட்டும் எண்ணம் எழலாம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் புனித பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. ஊடகம் மற்றும் நடிப்பு துறையில் இருப்பவர்கள் நற்பலனைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். தொழிலில் நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முக்கிய வேலையை முடிக்க சக பெண் ஊழியரின் உதவியைப் பெறக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவார்கள். பணியிடத்தில் பெண் ஊழியரின் உதவி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் ஆளுமையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் இக்காலத்தில் கடனில் சிக்க வைக்கும். இக்காலத்தில் பணியிடத்தில் சக பெண் ஊழியரின் ஆதரவு கிடைக்காததால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் காதல் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களிடம் யாரேனும் ப்ரொப்போஸ் செய்யலாம். தொழில் ரீதியாக, இக்காலத்தில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களிடம் புதிய பொறுப்புக்களை வழங்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்வதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல யோகமான காலமாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. துணையுடன் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இக்காலத்தில் உங்கள் உடன் வேலை செய்வோரைக் காதலிக்கலாம்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இக்காலத்தில் ஒரு பெண்ணுடன் பிரச்சனையை சந்திக்கலாம். இக்கால கட்டத்தில் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் எவ்வித சண்டையையும் போட வேண்டாம். காதலைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்காது. வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications