Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
சுக்கிர பெயர்ச்சியால் இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
Venus Transit In Scorpio On 25 December 2023: ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை மாற்ற 30 நாட்கள் ஆகும். தற்போது சுக்கிரன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 டிசம்பர் 25 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து விலகி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். புத்தாண்டிற்கு முன் சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் உயர்வை காண்தோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் காண்பார்கள்.

அதோடு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இது தவிர, தொழிலில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications