Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை
சுக்கிர பெயர்ச்சியால் டிசம்பர் 25 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Venus Transit In Scorpio On 25 December 2023: வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அப்படி மாற்றும் போது ஒருவரது நிதி நிலை, காதல், மகிழ்ச்சி ஆகியவற்றில் தாக்கம் ஏற்படும். 12 ராசிகளில் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதி செவ்வாய் ஆளும் விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

இப்படி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்ய விரும்பினால், இக்காலத்தில் செய்தால், நல்ல பலனைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்டும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். மகர ராசியின் அதிபதி சனி. சுக்கிரனும், சனியும் நண்பர்கள். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெற வைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சிலர் நிலம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் உறவுகள் இனிமையாக இருக்கும். முக்கியமாக சுக்கிரனின் அருளால் எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். சிக்கிய பணம் சுக்கிரனின் அருளால் இந்த காலத்தில் கைக்கு கிடைக்கும். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆளுமை மேம்படும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications