Latest Updates
-
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம்
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்க போறாங்க..
Venus Transit In Sagittarius On January 2024: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சுக்கிரன் ஜனவரி 18 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைந்தார்.

தனுசு ராசியில் சுக்கிரன் நுழைந்ததால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இது அதிர்ஷ்ட வீடு என்பதால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் ஆசிரியர்கள், ஆலோசகர்கள் இக்காலத்தில் சுக்கிரனின் அருளால் தங்கள் துறையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மேலும் நீண்ட நாட்களாக கடின உழைப்புக்கு கிடைக்காத பலன் இனிமேல் கிடைக்கும். முக்கியமாக உங்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். குறிப்பாக பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்வார்கள். அதன் விளைவாக உயர்அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெறுவார்கள். சிலருக்கு சிறப்பான செயல்திறனால் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் செய்து வந்தால், இக்காலகட்டத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழில் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிறப்பான செயல்திறனால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு என்ற தனி அடையாளத்தை உருவாக்குவார்கள். உடன் வேலை செய்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அவர்களின் உதவியால் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications