Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
தனுசு செல்லும் சுக்கிரனால் ஜனவரி 18 முதல் இந்த 3 ராசிகளுக்கு லாபமும், வெற்றியும் குவியப் போகுது...
Venus Transit In Sagittarius On 18 January 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது சுக்கிரன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். ஜனவரி 18 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார். தனுசு குரு பகவானின் ராசியாகும்.
தனுசு ராசியில் சுக்கிரன் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திட்டமிட்ட காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல லாபத்தைத் தரும். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜனவரி 18 முதல் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வழக்கத்தை விட நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கலாம். ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக தாயின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வேலையும், வியாபாரமும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications