Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப்போகுது...
Venus Transit In Rohini Nakshatra On 27 May 2024: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இது தவிர அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 27 ஆம் தேதி சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தில் நுழையவுள்ளார்.
ஜோதிடத்தின் படி, 27 நட்சத்திரத்தில் ரோகிணி 4 ஆவது நட்சத்திரமாகும். இது சந்திரனின் நட்சத்திரமாகும். இந்த ரோகிணி நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரிகள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தில் ஆதரவால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் இலக்கை எளிதில் அடைவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications