Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேரப் போகுது...
Venus Transit In Pisces On 31 March 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுன்கிரன். இந்த சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

மீன ராசியில் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது நல்ல அதிர்ஷ்டத்தையும், நிதி நன்மைகளையும் வழங்கவுள்ளன. அதோடு திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை போன்றவை இனிமையாக இருக்கும். வணிகத்தில் பெரிய வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் 31 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபராக இருந்தால், நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர் கிடைக்கலாம். திரைத் துறை, மாடலிங், ஃபேஷன் டிசைனிங், நடிப்பு, இசை போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இதனால் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களையும் பெற முடியும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் 31 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பாராட்டுக்களும், முன்னேற்றமும் கிடைக்கும். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications