Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க பண பிரச்சனைகளை சந்திக்க போறாங்க.. உஷார்..
Venus Transit In Pisces On 31 March 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும் பூமியிலும் காணப்படும். அந்த வகையில் வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதுவரை கும்ப ராசியில் பயணித்து வந்த சுக்கிரன், மார்ச் 31 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும். இப்போது மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பார்த்து, பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளை காண்பார்கள். எனவே பணியிடத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் நெருக்கமான ஒருவரால் நீங்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் அவமானத்தை சந்திக்க நேரிடும். எந்த காரணமும் இல்லாமல் பிரச்சனை உங்களைத் தேடி வரும். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்படும். எனவே இந்த காலகட்டத்தில் எந்த பிரச்சனை வந்தாலும், அதிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் இப்பெயர்ச்சியால் பண இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அத்துடன் உறவுகளிலும் சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இன்று முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தினருடன் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications