Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்!
ஒரு வருடத்திற்கு பின் துலாம் செல்லும் சுக்கிரன்: நவம்பர் 30 முதல் இந்த 3 ராசிகளின் செல்வம் பெருகும்...
Venus Transit In Libra On 30 November 2023: நவகிரகங்களின் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை மாற்றுவதற்கு ஒரு மாத காலம் ஆகும்.
தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு சுக்கிரன் செல்லவுள்ளார். ஒரு வருடம் கழித்து சுக்கிரன் தனது மூல திரிகோண ராசிக்கு செல்வதால், இந்த சுக்கிர பெயர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றியும், லாபமும் கிடைக்கும். இப்போது நவம்பர் 30 ஆம் தேதி நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையம். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை நிறைவேறும்.
பந்தயம், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் பணத்தை எங்கு முதலீடு செய்வதாக இருந்தாலும், யோசித்து செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். திடீர் பண வரவைப் பெறக்கூடும்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை, எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வணிகத்தைத் தொடங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளைக் காண்பார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பண வரவு அதிகமாக இருக்கும். தேவையில்லாத செலவுகள் அதிகம் சந்திக்க நேரிடும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications