Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் நவம்பர் 30 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியப்போகுது...
Venus Transit In Libra On 30 November 2023: ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. மேலும் நவகிரகங்களில் அழகு, காதல், ஆடம்பரம், பெருமை, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாதம் வரை இருப்பார். தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இன்னும் 10 நாட்களில் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் 2023 நவம்பர் 30 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்லவுள்ளார்.

சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வதால், இந்த சுக்கிர பெயர்ச்சியானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். சுக்கிரன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, பண மழை பொழியப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தால், இந்த பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். வழக்கத்தை விட நிதி நிலை வலுவடையும். தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சிலர் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் திட்டம் கொண்டிருப்பவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். சிலர் இப்பெயர்ச்சியால் எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications