Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிம்மம் செல்லும் சுக்கிரன்: அக்டோபர் 02 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
Venus Transit In Leo On October 2023: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜோதிடத்தில் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2023 அக்டோபர் 02 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே சுக்கிரன் சிம்ம ராசியில் நுழைவதால், அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் அதன் தாக்கம் அதிகமாக காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. புதிய வருமான ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் போடப்படும் திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. கும்பம்
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழில் செய்து வந்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் மற்றும் இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தொடர்பான பயணங்களை செய்ய நேரிடும். இந்த பயணமும் நல்ல பண ஆதாயத்தைத் தருவதாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அக்டோபர் 2 முதல் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். மேலும் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். முக்கியமாக புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications