Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
சிம்மம் செல்லும் சுக்கிரன்: அக்டோபரில் லட்சுமி தேவியின் அருளால் இந்த 4 ராசிகளின் நிதி நிலை உயரப்போகுது..
Venus Transit In Leo On October 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் அதிபதியாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, புகழ், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் அக்டோபர் 02 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார்.

சிம்ம ராசிக்கு செல்லும் சூரியனின் தாக்கம் அனைத்து ராசிக்களிலுமே காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் லட்சுமி தேவியின் அருளைப் பெறவுள்ளார்கள். அதாவது, இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அக்டோபர் 2 முதல் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப் போகிறது. முக்கியமாக குரு பகவான் உச்சமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். முக்கியமாக பெற்றோரின் ஆசி கிடைக்கும். புதிய வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு அக்டோபர் 2 முதல் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். இதனால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications