Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
சுக்கிர பெயர்ச்சியால் ஜூலை 07 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...
Venus Transit In Leo On July 2023: நவகிரகங்களில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில், அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார் மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது சுக்கிரன் சந்திரன் ஆளும் கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 ஜூலை 07 ஆம் தேதி சுக்கிரன் சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசிக்குள் நுழையும் சுக்கிரன் ஜூலை 23 ஆம் தேதி வக்ரமாகி கடக ராசியை அடைகிறார்.
சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சுக்கிரனின் நிலையால் நல்ல அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் பெண்களாலும், பெண்கள் ஆண்களாலும் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ளலாம். வணிகர்களுக்கு இக்காலம் நல்ல லாபத்தைத் தரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சு இனிமையாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சாலேயே பல காரியங்களை சாதிப்பீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் மகிழ்ச்சியடைவார்கள். பணியிடத்தில் பெண்களின் உதவியால் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். உடன்பிறந்தவர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 6 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தைரியமாகவும், துணிச்சலுடனும் இருப்பார்கள். தந்தையின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, இக்காலம் சாதகமாக இருக்கும். இக்கால கட்டத்தில் ஒரு பெண்ணின் உதவியால் நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தம் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications