Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
சிம்மம் செல்லும் சுக்கிரன்: ஜூலை 07 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கப் போகுது...
Venus Transit In Leo On July 2023: நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், செல்வம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரனின் அருள் இருந்தால் தான், ஒருவரது நிதி நிலை சிறப்பாகவும், ஆடம்பர வாழ்க்கையையும் வாழ முடியும்.
சுக்கிரன் ராசியை மாற்ற 23 நாட்கள் ஆகும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் கடக ராசியில் இருந்து சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு ஜூலை 07 ஆம் தேதி செல்கிறார்.

சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சிம்மம் செல்லும் சுக்கிரனால் 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது ஜூலை மாதத்தில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய வாகனம் வாங்கலாம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களும் உருவாகலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இக்காலத்தில் நிதி ரீதியாக மிகவும் செழிப்பாக இருப்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள். உங்களின் குணாதியங்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதோடு, மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். உங்கள் சேமிப்பு இக்காலத்தில் அதிகரிக்கும். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். உங்களின் பேச்சு இக்காலத்தில் மற்றவர்களை கவரும் வகையில் இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications