Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சிம்மம் செல்லும் சுக்கிரனால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்..
Venus Transit In Leo On 07 July 2023: ஜோதிடத்தில் சுக்கிரன் ஆடம்பரம், அழகு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் நல்ல செல்வ செழிப்போடு, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் 2023 ஜூலை 07 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசிக்குள் நுழையும் சுக்கிரன், அந்த ராசியில் ஜூலை 23 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்க தொடங்குகிறார். அதன் பின் ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசியை அடைகிறார்.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி மீண்டும் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைளும், சவால்களும் நிறைந்ததாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் திடீரென பல சவால்களை சந்திக்கலாம்.
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நம்பிக்கைக்குரியவர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது மகர ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காது.
முக்கியமான வேலைக்காக லோன் வாங்க நினைத்தால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். வியாபாரிகள் இக்காலத்தில் பெரிய சவால்களை சந்திக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது மீன ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். உடல் மற்றும் மன ரீதியான வலியை அனுபவிக்கக்கூடும். மற்றவர்களுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். திடீரென்று தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை தீவிரமாக வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications