Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
சுக்கிர பெயர்ச்சியால் மே 02 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கப் போகுது...
Venus Transit In Gemini On May 2023: நவகிரகங்களில் ஆடம்பரம், அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சுக்கிரன் இன்னும் ஒருசில நாட்களில் தனது ராசியை மாற்றவுள்ளார். அதாவது சுக்கிரன் மே 02 ஆம் தேதி புதன் ஆளும் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். சுக்கிரன் ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்.

குறிப்பாக நிதி நிலையில் ஒருவித மாற்றம் ஏற்படும். அதுவும் மிதுன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறவுள்ளார்கள். இப்போது மிதுனம் செல்லும் சுக்கிரனால் மே 02 முதல் எந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு இருக்கப் போகிறது. இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
புதிய வேலையை இக்காலத்தில் தொடங்கினால் நல்ல வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, அருமையாக இருக்கும். உங்களின் பேச்சு இக்காலத்தில் மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இதுவரை உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், இந்த சுக்கிர பெயர்ச்சிக்குப் பின் அது கைக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் கடனாக கொடுத்த பணத்தை இக்காலத்தில் திரும்ப பெறுவார்கள்.
பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். மார்கெட்டிங், மீடியா, வக்கீல் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். குழந்தைகளால் இக்காலத்தில் நற்செய்திகளைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமையும் இருக்கும்.
உங்களின் வசதிகள் பெருகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பை முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

