Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சொர்க்கம் மாதிரி மாறப்போகுதாம்... உங்க ராசி என்ன?
Venus Transit In Gemini: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வோர் கிரகமும் ஒரு விஷயத்துடன் தொடர்புடையதாக இருக்கும். அந்த வகையில் காதல் மற்றும் உறவுகளின் கிரகமாக சுக்கிரன இருக்கிறார். பெரும்பாலும் காதலுடன் தொடர்புடைய சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு மிதுன ராசியில் நுழையத் தயாராக இருக்கிறார். சுக்கிரன் இராசி வழியாக பயணிக்கும்போது, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அம்சத்தைப் பாதிக்கிறது, குறிப்பாக காதல் உறவுகளை பாதிக்கிறது.
ஜோதிடரீதியாகப் பார்த்தால், மிதுனத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி குறிப்பிட்ட ராசி அறிகுறிகளின் காதல் வாழ்க்கையில் பல சுபவிளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. இந்த பதிவில் மிதுனத்தில் சுக்கிரன் சஞ்சாரம் காரணமாக அவர்களின் காதல் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கப்போகும் ராசிகாரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சுக்கிரன் முதல் மற்றும் ஆறாவது வீடுகளை ஆட்சி செய்கிறார் மற்றும் தற்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீட்டிற்கு மாற உள்ளார். மிதுன ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால், ரிஷப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் துணையுடன் நல்ல நடத்தையை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பும் பாசமும் வளரும், இது உங்கள் உறவை பலப்படுத்தும்.
மிதுனம்
சுக்கிரன் மிதுனத்தின் ஐந்தாம் மற்றும் பன்னிரண்டாம் வீடுகளை ஆட்சி செய்கிறார், இப்போது உங்கள் முதல் வீட்டிற்குச் செல்கிறார். மிதுன ராசியில் நடக்கும் இந்த சுக்கிர பெயர்ச்சியால், இந்த காலகட்டம் முழுவதும் நீங்கள் உங்கள் துணையுடன் சிறந்த இணக்கத்தை அனுபவிப்பீர்கள், ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் உறவு அடுத்த நிலைக்குச் செல்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு மூன்றாவது மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார், இந்த சுக்கிர பெயர்ச்சியால் இப்போது சுக்கிரன் பதினொன்றாவது வீட்டிற்குச் செல்லப் போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் துணையுடன் நீங்கள் வலுவான தொடர்பைக் கொண்டிருப்பீர்கள், அதன் நேர்மறையான செல்வாக்கு உங்கள் உறவை மேம்படுத்தும். உங்கள் உறவில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் உணர்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் இரண்டு மற்றும் ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியாக இருக்கிறார், இப்போது அது உங்கள் பத்தாம் வீட்டில் நு;ழையப் போகிறது. இந்த பெயர்ச்சியால் விதியின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் வலுவான தொடர்பை உணர்வீர்கள். உங்களுக்குள் இருந்த கடந்த கால கசப்புகள் நீங்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின், முதல் மற்றும் எட்டாவது வீடுகளை சுக்கிரன் ஆட்சி செய்கிறார், அது இப்போது உங்கள் ஒன்பதாவது வீட்டிற்குள் நுழைகிறது. மிதுன ராசியில் இந்த சுக்கிரன் சஞ்சாரத்தின் போது உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்.
கும்பம்
சுக்கிரன் கும்பத்தில் நான்காவது மற்றும் ஒன்பதாம் வீடுகளை ஆட்சி செய்கிறார், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ஐந்தாவது வீட்டிற்குள் நுழைகிறது. மிதுன ராசியில் இந்த சுக்கிர பெயர்ச்சியின் போது, உங்கள் காதல் வாழ்க்கையில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள், உங்கள் துணையின் அன்பில் நீங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காண்பீர்கள். இது உங்கள் உறவில் எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
