Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
சுக்கிர பெயர்ச்சியால் மே 30 வரை இந்த 3 ராசிக்கு பண பிரச்சனை அதிகமா இருக்கப் போகுது.. கவனமா இருங்க...
Venus Transit In Gemini 2023: நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பான நிலையில் இருந்தால் தான், அந்நபரின் கையில் செல்வம் அதிகம் புரளும். அதுவே மோசமான நிலையில் இருந்தால், நிறைய பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் மே மாதம் 02 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைந்தார். மிதுன ராசியானது நட்புறவு கொண்ட புதனின் ராசியாகும். இந்த மிதுன ராசியில் புதன் மே 30 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார்.

மிதுன ராசியில் நுழைந்துள்ள சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நிறைய பண பிரச்சனைகளை சந்திப்பதோடு, திருமண வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் பல பிரச்சனைகளை சந்திப்ப வேண்டியிருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் இரட்டை மனநிலையிலேயே இருப்பார்கள். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். மனநிலை மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்கள் தங்கள் வீட்டில் சொல்லாமல் காதலரை திருமணம் செய்து கொள்ள திட்டமிடலாம். இந்நிலையில் அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். இக்காலத்தில் வாதத்தை பெரிதாக விடாதீர்கள். இல்லாவிட்டால் பிரிவு ஏற்படும். வியாபாரிகள் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனும், செவ்வாயும் இணைந்திருக்கும் காலத்தில், அதாவது மே 10 ஆம் தேதி வரை ஆரோக்கிய பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும். மருத்துவ செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இந்த செலவால் ஒரு கட்டத்தில் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
