Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகுது..
Venus Transit In Capricorn On 12 February 2024: வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். மேலும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இத்தகைய சுக்கிரன் பிப்ரவரி 12 ஆம் தேதி, அதாவது இன்று சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். சனி மற்றும் சுக்கிரனுக்கு இடையே நட்புறவு என்பதால், இந்த சுக்கிர பெயர்ச்சியானது சற்று சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். இப்போது மகரம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வருமானம் தொடர்பான விஷயங்களில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக ஆடம்பரமான பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீடு, நிலம் போன்றவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சுக்கிரனின் அருளால் காதல் உறவு திருமணமாக மாற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications